Sunday, 17 November 2013

பேஸ்புக் பேக் ஐ.டி கண்டுபிடிக்க சில டிப்ஸ்....

பேஸ்புக் பேக் ஐ.டி கண்டுபிடிக்க சில டிப்ஸ்....



இத வச்சி இனி நீங்க கரெக்டா உங்க நண்பர்கள் அல்லது உங்களுக்கு நெருக்கமானவங்ககிட்ட மட்டும் சாட் செய்யலாம். நம்ம பசங்க யாராவது பொண்ணங்க ஐ.டி ல இருந்து உங்கள கலாய்ச்சா ஈஸியா கண்டுபிடிச்சரலாம். இதோ அந்த தகவல் களஞ்சியம்....

1.பெண்களின் பெயரில் வரும் பேக் ஐடிக்கள் பெரும்பாலும் தமன்னா,அசின்,த்ரிஷா, ஹன்சிகாவின் புகைப்படங்கள் அல்லது ஏதாவது பூ,இயற்கைக் காட்சிகளை கொண்ட புகைப்படங்களை புரோபைலில் வைத்திருப்பார்கள் அது தான் நம் முதல் குளூ.

2.பெண்களின் பெயர்களில் வருபவர்கள் ஆண்களுக்கே அதிகம் பிரெண்ட்ஸ் ரெக்வெஸ்ட் தருவார்கள். நம்மகிட்ட அதிகமா விளையாட்டு காட்டுவாங்க பாஸ் நம்பிராதிங்க.

3.எப்போதும் தங்களை மற்றவர்கள் நம்பவேண்டுமென்பதற்காக பெண்கள் போலவே பாவனை செய்வார்கள். ச்சோ ச்வீட், என்றோ ச்சோ க்யூட்,என்றோ கமெண்ட் போடுவார்கள்.

4.பேக் ஐடிக்கள் எதையும் யோசித்து பதிவு எழுதாது. குட்மார்னிங் என்றோ குட்ஈவினிங் என்றோ ஸ்ட்டேடஸ் போடும்.பெண்களின் பெயரில் வரும் பேக்ஐடிக்களுக்கு எப்படி ஐந்து நிமிடத்தில் ஐநூறு லைக் வாங்க வேண்டுமென்று நன்கு தெரியும் அந்த ஜாம்பவான்களுக்கு. நான் நேற்று ரசம் வைத்தேன் என்று ஒரு பதிவு போடுவார்கள். உடனே ஐநூறு லைக் விழும்.அவங்க விஷம் வச்சா கூட ஆயிரம் பேர் லைக் போடுவார்கள் என்பது வேறு விசயம்.

5.சாட்டிங் செய்தால் அவர்களை மிகச்சுலபமாக கண்டுப்பிடித்துவிடலாம் . ஹாய் என்று தயங்கி தயங்கி டைப் செய்வார்கள். பதிலுக்கு ஹாய் சொன்னால் ஐந்து நிமிடம் எதையோ யோசித்து யோசித்து மீண்டும் ஹை என்றுடைப் செய்து விட்டு பிறகு கொஞ்சநேரம் கழித்து ஆப்லைன் சென்றுவிட்டு வருவார்கள். ஏனேன்றால் அவர்கள் ஃபேக் ஐ.டி க்களை உருவாக்கியதே பெண்களிடம் பேசத்தான் அதிக ரெக்வஸ்டும் பெண்களுக்கு தான் தருவார்கள்.

6.பேஸ்புக்கில் வரும் பெண் பேக் ஐடிக்கள் மறந்தும் அரசியல் பதிவுகளை எழுத மாட்டார்கள். அப்படியே எழுதினாலும் கேப்டன் நேற்று இரவு தண்ணி அடித்தார். காலையில நிருபர்களைஅடித்தார் என்ற ரீதியில் மொக்கையாக எதையாவது சொல்லி விட்டு போவார்கள்

7.எங்க வீட்டில மாப்பிள்ளை பார்க்குறாங்க. பேஸ்புக்கில் யாராவது நல்லவன் இருந்தா சொல்லுங்க என்பது போன்றோ அல்லது என்னை கல்யாணம்செய்யுறவன் செத்தான் என்பது போன்றோ பதிவுகளை அடிக்கடி போட்டால் அது கன்பார்மாக பேஸ்புக்கில் பெண்களின் பெயரில் உலவும் பேக் ஐடியே தான்

8.அடிக்கடி எனக்கு சமையல் தெரியாது. துணி துவைக்க தெரியாது அதெல்லாம் போர் என்று பதிவு போடும். நாமும் கன்பார்மாக அது பெண்ணேதான் என்று ஜொள்ளு விட்டுக்கொண்டு லைக் போடுவோம். இனி அந்த தவறை செய்யாதிங்க.

9.போட்டோஸ்ல பாத்திங்கனாளே தெரிஞ்சிரும் பாஸ் அதுல அந்த பொண்ணோட போட்டோஸ் நிறைய இருந்தா ஓ.கே, அதே ஒரே ஒரு போட்டோ மட்டும் அல்லது சமந்தா, நஸ்ரியான்னு நிறைய போட்டோ இருந்தா அது நம்ம பயபுள்ள தாங்க யாரோ.

10.பேஸ்புக் பேக் ஐ.டி கண்டுபிடிக்க சில டிப்ஸ்.... பொண்ணுங்க அவ்ளோ சீக்கிரம் ப்ரெண்ட் ரேக்வஸ்ட ஏத்துக்கமாட்டாங்க, நீங்க ரேக்வஸ்ட அனுப்பி உடனே ஏத்துக்கிட்ட அது ஃபேக் ஐ.டி யே தான். இனிமேலாவது கேள்ஸ் க்கு ரெக்வஸ்ட் கொடுக்கும் போது செக் பண்ணிகிங்க.

நன்றி
pragadeesh Mannai

Wednesday, 13 November 2013

வலைப்பூ (BLOG/ ப்ளாக் ) தொடங்குவது எப்படி ?


பாடம் 1: வலைப்பூ (BLOG/ ப்ளாக் ) தொடங்குவது எப்படி ?



(Blogger) ப்ளாக்கின் மூலம் நீங்கள் எளிதாக ஒரு உங்கள் எண்ணங்கள் வெளியிட ஒரு இலவச வலை சார்ந்த கருவியாகும்.

இதை வெப்ப்ளாக் (weblog) என்று அழைக்கப்படும் இலவச சேவை ஆகும். ப்ளாக் மூலம் நீங்கள் உங்களுடிய கருத்துகளை வெளியிடமுடியும். இந்த சேவை முற்றிலும் இல்லவசமான சேவை. பலவிதமான ப்ளாக் இலவச சேவை அளித்தாலும் அதில் அதிகமா பயன்பதுடுவது கூகுளின் பிளாக்கர் மற்றும் வோர்ட்ப்றேச்ஸ் தளமும்.

நாம் இந்த பதிவுகளின் தொடரில் பார்க்க இருப்பது பிளாக்கர் பற்றியது.




பிளாக்கர் சிறப்பு அம்சங்கள்:

இது முற்றிலும் இலவசம்.

வெறும் கணினி அறிவு மட்டும் இருந்தால் போதும் உங்களுக்கு என்று ஒரு வலைப்பூவை நீங்கள் உருவாக்கலாம்.

வெப்சைட் பயன்படுத்த உங்களுக்கு வெப் டிசைன் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் வலைபூ பயன்படுத்த அது தேவை இல்லை.

 இது பயன்படுத்த நம்பமுடியாத அளவிற்கு எளிது!

 இது எளிதாக போன்ற Picasa, யூ டியூப், கூகுள் போன்ற பிற Google சேவைகள், உடன் இணைக்கப்பட்டிருக்கும்.

Sunday, 13 October 2013

Windows 8.1, Android டேப்லட்களுக்காக Intel அறிமுகப்படுத்தும் புதிய சிப் :-

Windows 8.1, Android டேப்லட்களுக்காக Intel அறிமுகப்படுத்தும் புதிய சிப் :-



கணனிகளுக்கான சிப்களை உற்பத்தி செய்வதில் முன்னணியில் திகழும் Intel நிறுவனமானது Z3000 எனும் தொடரிலக்கத்தினை உடைய Atom சிப்களை உருவாக்கியுள்ளது.
இந்த சிப்கள் Windows 8.1, Android இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட டேப்லட்களின் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை 17GB/s எனும் வேகத்தில் தரவுகளைக் கடத்தக்கூடியவாறு காணப்படுவதுடன், 2.4GHz வேகம் உடையதாகவும், அதி வேகத்தினைக் கொண்ட பிரதான நினைவகத்திற்கு ஒத்திசைவாக்கம் உடையதாக இருக்கும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி
pragadeesh Mannai

உலகின் வேகம் கூடிய தரவுப்பரிமாற்றம் கொண்ட மெமரி கார்ட் :-

உலகின் வேகம் கூடிய தரவுப்பரிமாற்றம் கொண்ட மெமரி கார்ட் :-



CompactFlash நிறுவனமானது கடந்த வருடம் CFast 2.0 மெமரி கார்ட் தொடர்பான அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள இந்த மெமரிக் கார்ட் ஆனது உலகின் வேகம் கூடிய தரவுப்பரிமாற்றம் கொண்டதாகக் காணப்படுகின்றது.
இதன் அடிப்படையில் இதிலுள்ள தரவுகள் 450 MB/s எனும் வேகத்தில் வாசிக்கப்படக்கூடியதாகவும், 350 MB/s எனும் வேகத்தில் பதிவேற்றம் செய்யக்கூடியதாகவும் அமைந்துள்ளது.
256 GB சேமிப்பு கொள்ளவு உடைய CFast 2.0 மெமரி கார்ட்டின் விலையானது 1,809 டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
நன்றி
pragadeesh Mannai

தமிழ் மொழியில் இயங்கும் Galaxy Note 3 :-

தமிழ் மொழியில் இயங்கும் Galaxy Note 3 :-



   சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 3 மற்றும் கேலக்ஸி கியர் ஸ்மார்ட்வாட்ச்சை இந்தியாவின் தலைநகரமான டெல்லியில்  வெளியிட்டுள்ளது.
இந்த கேலக்ஸி நோட் 3 யை தமிழ் மொழியிலும் இயக்கலாம். இதன் முக்கிய சிறப்பம்சங்களில் இதுவும் ஒன்றாகும்.
சாம்சங் கேலக்ஸி நோட் 3யின் விலை ரூ. 49,990 ஆகும். கேலக்ஸி கியர் ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 22,990 ஆகும்.
5.7இன்ஞ் 1080p சூப்பர் அமோலெட் பேனல் கொண்ட கேலக்ஸி நோட் 3, 1.9GHZ எக்ஸ்னோஸ் ஆக்டா கோர் பிரசாஸர் உடன் வந்துள்ளது.
13 மெகாபிக்சல் கமெரா, 2 மெகாபிக்சல் Front கமெரா உள்ளன. ஆன்டிராய்ட் 4.3 ஜெல்லிபீன் ஓஎஸ் கொண்டுள்ள கேலக்ஸி நோட்3யில் 3ஜிபி ராம் உள்ளது.
கேலக்ஸி நோட்3யில் 4k வீடியோக்களை படம்பிடிக்கலாம். இது 32ஜிபி மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மெமரியுடன் கிடைக்கிறது.

புதிய லோகோவை அறிமுகப்படுத்தியது Bing :

புதிய லோகோவை அறிமுகப்படுத்தியது Bing :-



யாஹூ நிறுவனத்தை தொடர்ந்து, பிங்கும் தனது லோகோவை மாற்றியுள்ளது.
சமீபத்தில் யாஹூ நிறுவனம் தனது புதிய லோகோவை அறிமுகம் செய்தது.
இதுகுறித்து பல்வேறு கருத்துகளும் எழுந்தன.
இந்நிலையில் மைக்ரோசாப்டின் பிங் சர்ச் இஞ்சின் தனது புதிய லோகோவை அறிமுகம் செய்துள்ளது.
லோகோ மட்டுமல்லாமல் பிங் இணையதளத்தின் வலை பக்கங்களும் புதிய தோற்றத்துடன் காட்சியளிக்கின்றன.
நன்றி
pragadeesh Mannai

விரிவுபடுத்தப்பட்டது Google Play Books சேவை :-

விரிவுபடுத்தப்பட்டது Google Play Books சேவை :-



எண்ணற்ற இணைய சேவைகளை வழங்கிவரும் கூகுள் நிறுவனமானது தனது Google Play Books சேவையை மேலும் 9 நாடுகளுக்கு விரிவுபடுத்தியுள்ளது.
இதன்படி Indonesia, Hong Kong, Malaysia, Philippines, Singapore, Taiwan, Thailand, Vietnam, and New Zealand ஆகிய நாடுகளில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சுமார் 4 மில்லியனுக்கும் மேற்பட்ட புத்தகங்களைக் கொண்டு இந்த ஒன்லைன் சேவை நடத்தப்பட்டு வருகின்றது.
இச்சேவையினூடாக புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கு Google Play தளத்தினை பயன்படுத்த முடிவதுடன் இணைய இணைப்பு அற்ற வேளைகளில் புத்தகங்களை பார்வையிடும் வசதி காணப்படுகின்றது.
மேலும் இச்சேவையினை பெறுவதற்கா Android மற்றும் iOS இயங்குதளங்களில் செயற்படக்கூடிய அப்பிளிக்கேஷன் உருவாக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நன்றி
pragadeesh Mannai

Total Pageviews