Wednesday, 13 November 2013

வலைப்பூ (BLOG/ ப்ளாக் ) தொடங்குவது எப்படி ?


பாடம் 1: வலைப்பூ (BLOG/ ப்ளாக் ) தொடங்குவது எப்படி ?



(Blogger) ப்ளாக்கின் மூலம் நீங்கள் எளிதாக ஒரு உங்கள் எண்ணங்கள் வெளியிட ஒரு இலவச வலை சார்ந்த கருவியாகும்.

இதை வெப்ப்ளாக் (weblog) என்று அழைக்கப்படும் இலவச சேவை ஆகும். ப்ளாக் மூலம் நீங்கள் உங்களுடிய கருத்துகளை வெளியிடமுடியும். இந்த சேவை முற்றிலும் இல்லவசமான சேவை. பலவிதமான ப்ளாக் இலவச சேவை அளித்தாலும் அதில் அதிகமா பயன்பதுடுவது கூகுளின் பிளாக்கர் மற்றும் வோர்ட்ப்றேச்ஸ் தளமும்.

நாம் இந்த பதிவுகளின் தொடரில் பார்க்க இருப்பது பிளாக்கர் பற்றியது.




பிளாக்கர் சிறப்பு அம்சங்கள்:

இது முற்றிலும் இலவசம்.

வெறும் கணினி அறிவு மட்டும் இருந்தால் போதும் உங்களுக்கு என்று ஒரு வலைப்பூவை நீங்கள் உருவாக்கலாம்.

வெப்சைட் பயன்படுத்த உங்களுக்கு வெப் டிசைன் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் வலைபூ பயன்படுத்த அது தேவை இல்லை.

 இது பயன்படுத்த நம்பமுடியாத அளவிற்கு எளிது!

 இது எளிதாக போன்ற Picasa, யூ டியூப், கூகுள் போன்ற பிற Google சேவைகள், உடன் இணைக்கப்பட்டிருக்கும்.

உங்கள் பதிவுகளை நீங்கள் மின்னஞ்சல் மூலம் ஆன்லைனில் வெளியிடலாம் அல்லது உங்கள் மொபைல் போன் பயன்படுத்தி கொள்ளலாம்

ப்ளாக் தொடங்குவது எப்படி

 சரி நாம் தொடங்குவது பற்றி பார்போம். ப்ளாக் தொடங்க உங்களுக்கு கூகிள் அக்கௌன்ட் இருந்தால் போதும். இப்பொழுது கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பிளாக்கர் வெப்சைட் கு செல்லுங்கள்.

                                     www.blogger.com

அங்கே கூகிள் அக்கௌன்ட் மூலம் லாகின் செயயுங்கள். கூகிள் அக்கௌன்ட் என்றால் யூ டியுப், ஜிமெயில், கூகிள் பிளஸ் எதாவது ஒன்றில் உங்களுக்கு அக்கௌன்ட் இருந்தால் அதை கொண்டு லோக் இன் செய்யுங்கள். இல்லை என்றால் sign up பட்டன் னை கிளிக் செய்து உங்களுக்கு என்று ஒரு அக்கௌன்ட் டை உருவாக்குங்கள்.

 பாடம் 2: வலை பூவில் உங்களுக்கான ப்ளாக் தொடங்குவது எப்படி?

உங்கள் பக்கத்திற்கான பெயரை தேர்வு செய்து வைத்திருங்கள்.



முதலில் உங்களுடைய வலைபூவிற்கான பெயரை தேர்வு செய்துவிட்டீர்களா. அந்த பெயர் யாரும் பயன்படுததாக இருக்கவேண்டும்.

அடுத்து பிளாக்கர் தளத்தில் உள் நுழைத்தும்  காட்டியது போல்  அதில் நியூ ப்ளாக் என்பதை கிளிக் செய்யவும்.

இப்பொழுது கீழே காட்டியது போல் வரும். அதில் 


டைட்டில் (TITLE)

அதில் டைட்டில் (title ) என்ற இடத்தில உங்களுடைய வலைபூவிற்கு உரிய தலைப்பு வையுங்கள். தலைப்பு எதுவானாலும் இருக்கலாம் ஆனால் சற்று பொருத்தமாக வையுங்கள்.

அட்ரஸ் (ADDRESS)

அடுத்தது அட்ரஸ்( address) அதில் உங்கள் வலை பூவிற்கு சரியான எளிமையான அட்ரஸ் கொடுங்கள்.

அட்ரஸ் எளிமையாக இருந்தால் தான் வாசகர்கள் மனதில் நிறுத்த உதவும்.

(e.g) pragadeeshmannai.blogspot.com

மேலே காட்டியது போல் வலை பூ வின் அட்ரஸ் இருக்கும். நீங்கள் வைக்கும் பெயரோடு blogspot என்ற பின் ஒட்டு இருக்கும்.

உங்களுடைய அட்ரஸ் சை அதில் டைப் செய்யும் பொழுது அது வேறு யாரும் பயன்படுததாக இருந்தால் மட்டுமே ஏற்று கொள்ளும். அது வரை மாற்றி மாற்றி முயற்சிக்கவும்.

டெம்ப்ளேட் (TEMPLATE)

அடுத்தது டெம்ப்ளேட் இங்கு உங்களுடைய வலைத்தளம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது அதில் உங்களுக்கு பிடித்த டேம்லேட் டை கிளிக் செய்யவும் .
இறுதியாக (create blog) கிரியேட் ப்ளாக் என்பதை கிளிக் செய்யவும் சில நொடிகளில் உங்களுடைய வலை பூ உருவாகிவிடும்.


.

பாடம் 3: வலைப்பூவின் டாஷ்போர்ட் (DASHBOARD) பற்றிய தகவல்கள்
உங்களுடைய வலைபூ ஆரம்பமாகிவிட்டதுஇப்பொழுது நீங்கள் அதை நிர்வகிப்பது பற்றி பார்போம்.



பிளாக்கர் டஷ்போர்ட் மிக முக்கியமான ஒன்று. இதில் புது ப்ளாக் தொடங்க நீங்கள நியூ ப்ளாக் என்பதை கிளிக் செய்து முந்தய பதிவை பார்த்து இதில் மற்றொரு ப்ளாக் தொடங்கலாம்.

உங்களுடைய ப்ளாக் வரிசையாக காட்டப்படும். அதில் புதியதாக தொடங்கிய ப்ளாக் மேலே இருக்கும்.

அடுத்ததாக ஆரஞ்சு நிற பட்டன் ஒன்று உள்ளது இது புதிதாக அந்த ப்லாகில் பதிவு எழுத அதை கிளிக் செய்யவும். அடுத்தது ப்லாகில் அணைத்து வசதிகளும் அதில் கொடுகபடிருகும். அதற்கு தனியாக ஒரு பதிவு எழுத வேண்டி இருக்கும்.

இறுதியாக வீவ் ப்ளாக் அது உங்களுடைய வலை பூவை பார்க்க கிளிக் செய்யவும்.


உங்களுடைய ப்லாகில் பதிவுகள் எழுத தொடங்கியதும் அதன் கீழே வரகூடியவை


பாடம் 4: உங்களின் முதல் வலை பதிவு எழுதுவது எப்படி?

டஷ்போர்ட் டில் வீவ் ப்ளாக் என்பதை கிளிக் செய்யவும். அல்லது உங்கள் ப்ளாக் வெப் அட்ரஸ் சை ப்ரௌசெரின் அட்ரஸ் பாரில் டைப் செய்து பார்க்கவும்.
இப்பொழுது உங்கள் வலைப்பூவில் New Post என்று இருக்கும்.

கீழே உள்ள படத்தை கவனிக்கவும்.



டஷ்போர்ட் டில் ஆரஞ்சு நிற பென்சிலை கிளிக் செய்தால் மேலே உள்ளது போல் வரும்.

இதில் post என்ற இடத்திற்கு அடுத்து வரும் இடத்தில உங்களுடைய பதிவின் தலைப்பை டைப் செய்யுங்கள்.

அதற்கு கீழே உள்ள பெரிய பாக்ஸ் இல் உங்களுடைய பதிவுகளை டைப் செயுங்கள்.

உங்களுடைய பதிவு களுக்கு இடையே படங்களை சேர்க்க link என்ற இடத்திற்கு பக்கத்தில் உள்ள படத்தை கிளிக் செய்து இமேஜ் ஜெய் சேர்க்க முடியும்.

லிங்க் உருவாக்க தேவையான வார்த்தையை செலக்ட் செய்து அடுத்து லிங்க் என்பதை கிளிக் செய்யவும் இப்பொழுது வரும் பாக்ஸ் இல் உங்கள் லிங்க் பேஸ்ட் செய்து ஓகே செய்யுங்கள்.

மேலும் எழுத்தை மாற்ற மேலே உள்ள நார்மல் என்பதை மாற்றி பார்க்கவும் தேவையானதை செலக்ட் செய்து மாற்றி பார்க்கவும்.

வீடியோ சேர்ப்பதற்கு இமேஜ் கு அடுத்து உள்ள படத்தை கிளிக் செய்து வீடியோ அப்லோட் செய்து ஓகே கொடுக்கவும்.

யூடுப் வீடியோ களை ஷேர் செய்யலாம். உங்களுடைய வெப்காம் மில் ரெகார்ட் செய்தும் பதிவேற்றாலம்.

இறுதியாக உங்களுடைய பதிவை புப்ளிஷ் அல்லது save செய்யுங்கள். புப்ளிஷ் செய்தல் பதிவு உங்கள் ப்ளாக் கை பார்த்தால் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

நீங்கள் புப்ளிஷ் செய்ததும் இதை கூகிள் பிளஸ் சில் ஷேர் செய்யுங்கள் என்ற விண்டோ ஓபன் ஆகும். உங்களுடைய பதிவு உங்களுடைய பக்கத்தில் சஹர் செய்ய விரும்பினால் ஷேர் பட்டனை கிளிக் செய்யுங்கள் இல்லை என்றால் கான்சல் கிளிக் செய்யுங்கள்.

உங்களுடைய சந்தேகங்களை பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும்

நன்றி
Pragadeesh Mannai




Total Pageviews