Sunday, 13 October 2013

“Twitter Alert” மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வசதி அறிமுகம் :-





இயற்கை சீற்றம் போன்ற சூழ்நிலைகளில் எச்சரிக்கை தருவதற்காக Twitter Alert சேவை தொடங்கப்பட்டுள்ளது.
உலகளவில் பிரபலமடைந்த சமூக வலைத்தளங்களில் ஒன்று தான் டுவிட்டர்.
இது தற்போது புதுவித சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.  அதாவது இயற்கை சீற்றம் போன்ற அசாதாரண சூழ்நிலைகளில் எச்சரிக்கை தரும் சேவையை தொடங்கியுள்ளது.
இதுகுறித்து தலைமை அதிகாரி ஒருவர், கடந்தாண்டு லைப்லைன் என்ற பெயரில் ஜப்பானில் எமர்ஜென்சி அக்கவுன்ட்ஸ் மூலம் அவசரகால தகவல்களை பரிமாறிக்கொள்ள வழி செய்தோம்.
இதே பாணியில் இப்போது டுவிட்டர் அலர்ட் என்ற பெயரில் உலக முழுவதும் பயனளிக்கும் வகையில் ஏற்படுத்தியுள்ளோம்.
சட்டம் ஒழுங்கு பராமரிக்கும் பொலிஸ், பொதுமக்கள் பாதுகாப்பு ஏஜென்சிகள், அவசரகால சேவை அமைப்புகள், செஞ்சிலுவை போன்ற அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போன்றவை இதை பயன்படுத்தி பொதுமக்களுக்கு, அவ்வப்போது தேவையான எச்சரிக்கை தகவல்களை தரும் என்று நம்புகிறோம்.

மேலும், டுவிட்டர் அக்கவுன்ட் வைத்துள்ளவர்களுக்கு போனிலும் தகவல்களை சொல்ல தனி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டிவி, ரேடியோ போன்ற தகவல்தொடர்பு சாதனங்கள், மின்சார துண்டிப்பு போன்றவை ஏற்படும் போது டுவிட்டர் அலர்ட் சேவை பயன்படும் என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அமெரிக்கா உட்பட சில நாடுகளில் இயற்கை சீற்றம் போன்ற சூழ்நிலைகளில் எச்சரிக்கை மெசேஜ் தரும் சேவையை டுவிட்டர் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
நன்றி
pragadeesh Mannai

Total Pageviews