Sunday, 26 May 2013

முதல் ஆப்பிள் கம்ப்யூட்டர் ரூ.3.5 கோடிக்கு ஏலம்


ஆப்பிள்-1 கம்ப்யூட்டர் நிறுவனம் ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஸ்டீவ் வோஷ்னியாக் ஆகியோரால் தொடங்கப்பட்டது.
இந்நிறுவனம் கடந்த 1976-ம் ஆண்டில் முதன் முறையாக ஆப்பிள்-1 என்ற கம்ப்யூட்டரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

அப்போது, இக்கம்ப்யூட்டர் ரூ.36 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. மரத்தினால் ஆன கீ போர்டுடன் கூடிய இந்த கம்ப்யூட்டர் உலகம் முழுவதும் பரபரப்புடன் பேசப்பட்டது.

இந்த நிலையில் முதன் முதலில் தயாரிக்கப்பட்ட ஆப்பிள்-1 கம்ப்யூட்டர் ஜெர்மனியில் உள்ள பிரகர் இல்லத்தில் ஏலம் விடப்பட்டது.
அந்த கம்ப்யூட்டருடன், ஜாம்பவான்கள் ஸ்டீவ் ஜாப்ஸ், ஸ்டீல் வோஷ்னியாக் ஆகியோர் கையெழுத்துடன் கூடிய கடிதமும் ஏலத்தில் விடப்பட்டது.
அவை ரூ.3.5 கோடிக்கு ஏலம் போனது. ஆனால், அதை ஏலம் எடுத்தவர் பெயர் வெளியிடப்படவில்லை.
நன்றி
pragadeesh

Total Pageviews