தேடுபொறி மூலம் தனது பயணத்தை தொடங்கிய கூகுள் நிறுவனம் இதுவரை பல நிறுவனங்களை கையகப்படுத்தி பல்வேறு வசதிகளை தந்துள்ளது.
கூகுள் தனது சேவைகளில் சிலவற்றை அவ்வப்போது "Spring Cleaning" என்ற பெயரில் நிறுத்திவிடும்.
கடந்த வருடம் கூட Google Talk Chatback, iGoogle, Google Video போன்றவற்றை நிறுத்த போவதாக அறிவித்தது. தற்போது மேலும் சில வசதிகளை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. அதில் முக்கியமான ஒன்று கூகுள் ரீடர் (Google Reader).
கூகுள் ரீடர்
கடந்த 2005ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட கூகுள் ரீடர் நமக்கு விருப்பமான தளங்களை ஒரே இடத்தில் படிப்பதற்கு பயன்படுகிறது.
கூகுள் ரீடரை அதிகமானவர்கள் பயன்படுத்தியிருந்தாலும், அதன் பயன்பாடு கடந்த சில வருடங்களாகவே குறைந்துவிட்டது என்றும், அதனால் அதனை மூடப்போவதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது.
வரும் யூலை ஒன்று முதல் கூகுள் ரீடர் இயங்காது. கூகுள் ரீடரில் உள்ள தகவல்களை தரவிறக்கம் செய்துக் கொள்ளhttps://www.google.com/takeout/#custom:reader என்ற முகவரிக்கு செல்லவும்.
கூகுள் ரீடருடன் சேர்த்து Apps Script, Google Building Maker, Google Cloud Connect, Google Voice App for Blackberry, Snapseed Desktop for Macintosh and Windows மற்றும் இன்னும் சில சேவைகளை மூடபோவதாக கூகுள் அறிவித்துள்ளது.
