Sunday, 26 May 2013

பேஸ்புக் நண்பர்களை தேடிக் கண்டுபிடிப்பதற்கு உதவும் இணையம்:-



மில்லியன் கணக்கான பயனாளர்களை தன்னகத்தே கொண்டு சிறப்புடன் செயல்பட்டு கொண்டிருக்கிறது பேஸ்புக்.
இதில் நண்பர்களை தேடிக் கண்டுபிடிப்பதற்கு இணையத்தளமொன்று உதவிகரமாக உள்ளது.
புதிய நகரத்துக்கு செல்லும் போது அங்கு பழகி கொள்ள புதிய நண்பர்கள் தேவை என்று நினைத்தால், இந்த தளத்தின் மூலம் தேடிக் கொள்ளலாம். இது பேஸ்புக் வலைப்பின்னலில் இருந்து நண்பர்களை தேடித்தருகிறது.
குறிப்பாக பரஸ்பர நண்பர்கள் வலைப்பின்னலில் இருந்து புதிய நண்பர்களை இது சல்லடை போட்டு தேடித்தருகிறது.
எப்படி என்றால், முதலில் பேஸ்புக் நண்பர்களின் நட்பு பட்டியலில் இருந்து அவர்கள் நட்பு வட்டத்தில் உள்ளவர்கள், அவர்களின் நட்பு வட்டங்களில் உள்ளவர்கள் என்று நண்பர்களின் நண்பர்களை எல்லாம் திரட்டிக்கொள்கிறது.
அதன் பின் இந்த நண்பர்கள் குவியலில் இருந்து நமக்கு பொருத்தமான நண்பர்களை தேடித்தருவது தான் இந்த தளத்தின் பணி.
இருப்பிடம், குணாதிசயம், ரசனை, பழக்கவழக்கங்கள் என பல்வேறு அம்சங்களை அலசிப்பார்த்து தகுதி வாய்ந்த நண்பர்களை இந்த சேவை பரிந்துரைக்கிறது.
உதாரணமாக உங்கள் இருப்பிடம் அருகிலேயே உள்ள நண்பர்களை தேடிக்கொள்ளலாம், புத்தகம் படிப்பவர்கள் புத்தக ஆர்வம் உள்ளவர்களாக தேடிப்பார்க்கலாம்.
அவர்கள் புதியவர்கள் என்றாலும் உங்கள் நண்பனின் நண்பர் என்பதால் அதை சொல்லியே நீங்கள் அறிமுகமாகலாம் என்பதோடு அவர்களை தொடர்பு கொள்வது பாதுகாப்பானதாகவும் இருக்கும்.
நன்றி
pragadeesh Mannai


Total Pageviews