இந்தியாவை தளமாகக் கொண்டு இயங்கிவரும் Micromax நிறுவனமானது A110Q Canvas 2 Plus எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
கூகுளின் Android 4.2 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இக்கைப்பேசியானது 12.7 சென்டிமீட்டர், 854 x 480 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் 1.2GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Processor, பிரதான நினைவகமாக 1GB RAM ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.
மேலும் இதன் சேமிப்பு நினைவகமாக 4GB கொள்ளளவு தரப்பட்டுள்ளதுடன் microSD கார்ட்களின் உதவியுடன் 32GB வரை அதிகரிக்கும் வசதியும் காணப்படுகின்றது.
இவை தவிர 8 மெகாபிக்சல்கள் உடைய பிரதான கமெரா மற்றும் 2 மெகாபிக்சல்கள் உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா ஆகியவற்றினையும் கொண்டுள்ளன.
நன்றி
pragadeesh
pragadeesh
