இணையம் சார்ந்த பல சேவைகளை வழங்கிருவதுடன் போட்டி நிழ்ச்சிகளையும் நடாத்தி தனது பயனர்களை ஊக்குவித்துவரும் கூகுள் நிறுவனமானது Science Fair எனும் நிகழ்ச்சியினை ஆண்டுதோறும் நடாத்தி வருகின்றது.
விஞ்ஞான மற்றும் பொறியியல் உலகின் அடுத்த பரிணமாத்தினை மையமாக வைத்து நடாத்தப்பட்டுவரும் இப்போட்டியானது இந்த வருடம் மூன்றாவது முறையாக இடம்பெறுகின்றது.
CERN, LEGO Group, National Geographic மற்றும் Scientific American ஆகியவற்றுடன் இணைந்து கூகுள் நிறுவனத்தினால் நடாத்தப்படும் இப்போட்டியில் 13 தொடக்கம் 18 வரையான வயதுடையவர்கள் ஒன்லைனில் பங்குபற்ற முடியும்.